வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 15 செப்டம்பர் 2018 (13:07 IST)

கன்னியாஸ்திரி பலாத்காரம்: "குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்" - மஞ்சு வாரியர்

கேரள மாநிலம் கோட்டயம் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் பி‌ஷப்பாக இருப்பவர் பிராங்கோ மூலக்கல். இவர் அங்குள்ள கன்னியாஸ்திரியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் பிராங்கோ மூலக்கல் மீது இதுவரை தேவாலய நிர்வாகமும், போலீசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம்  கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த விவகாரத்தில் கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக நடிகை மஞ்சு வாரியர் கருத்து தெரிவித்துள்ளார். பி‌ஷப் பிராங்கோ மூலக்கல் மீது நடவடிக்கை எடுக்காததற்கு கடும் கண்டனமும் மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  தனது ‘பேஸ் புக்’கில் கூறியிருப்பதாவது குற்றம்சாட்டப்பட்டுள்ள  பிராங்கோ மூலக்கல் கைது செய்யப்பட வேண்டும். குற்றவாளி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்வதில் தாமதம் கூடாது. 
 
அப்படி தாமதமானால், அது புனிதமான பேராலயத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை அலட்சியப்படுத்துவதாக அமையும். ஏசு கிறிஸ்து மீது நம்பிக்கை  வைத்திருப்பவர்கள் யாரும் குற்றவாளிக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். “மிக விரைவில் நியாயம் கிடைக்க வேண்டும்.” இவ்வாறு மஞ்சுவாரியர்  கூறியிருக்கிறார்.