வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (20:08 IST)

ஆடைகளின் அரசி அனிதா சம்பத்... லாஸ்லியாவுடன் நச்சுன்னு ஒரு கிளிக்!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
 
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். அதன்பின்னர் பிக்பாஸ் 4ல் கலந்துக்கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

தற்போது திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து நடிகர் விமலுக்கு தங்கையாக புது படமொன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராணி போன்ற பிரம்மாண்டமான உடையில் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.