வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (16:21 IST)

சர்ச்சையில் சிக்கிய எம்மா வாட்சன்... இன்ஸ்டா பதிவால் கிளம்பிய எதிர்ப்புகள்!

ஹாலிவுட் நடிகையான எம்மா வாட்சன்  'ஹாரி பாட்டர்' சீரிஸ் படங்களில் நடந்து உலக புகழ் பெற்ற நடிகையாக பிரபலமானார். இந்நிலையில் அண்மையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய 11 நாள் தாக்குதலைக் கண்டித்துச் செல்லப்பட்ட பேரணி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 
 
அவரின் அந்த பதிவுகளுக்கு சிலர் எதிர்ப்புகளும், சிலர் ஆதரவுகளும் தெரிவித்து வருகின்றனர்.  பாலஸ்தீனப் போராட்டங்களுக்கு எம்மா வாட்சன் ஆதரவு தெரிவிப்பதாக கிளர்ச்சிகள் கிளம்பி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.