புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (15:25 IST)

உப்பு இல்லாம சமைக்கனுமா... சட்டபுட்டுனு வீட்டை விட்டு காலி பண்ணும் பிரியங்கா?

பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைத்துவிட்டு நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை சூடு பிடிக்க வைத்துள்ளார் பிக்பாஸ்.   இந்த நிகழ்ச்சியில் நேற்று நடிகர் சரத் குமார் என்ட்ரி கொடுத்து பணப்பெட்டி பரிசு தொகை வைத்து யார் இதை எடுத்துக்கொண்டு போக விரும்புகிறீர்களோ போகலாம் என கூறினார். 
 
இதையடுத்து இன்றைய முதல் ப்ரோமோவில் ரூ. 7 லட்சம் பணப்பெட்டி பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதை யார் எடுக்கப்போகிறார் என்பது ட்விஸ்ட் ஆக உள்ளது. அதிலும் நிரூப் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை பிரைன் வாஷ் செய்து அவர்கள் பெட்டி எடுக்க வேலை பார்த்து வருகிறார். 
 
மூன்றாவது ப்ரோமோ லக்ஸரி படஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. உப்பு, சர்க்கரை, வெங்காயம் இல்லாம சமைக்கனும் என்றதும் எனக்கு டாஸ்க் பண்ணனும் என கூறி நிரூப் அதை ஒப்புக்கொண்டார். ஆனால், பிரியங்கா, தாமரை, அமீர் என வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்டனர். எதுல அடிச்சாலும் தாங்குவா இந்த பிரியங்கா சோற்றுல அடிச்சால்  வீட்டுக்கே கெளம்பிடுவா.. என்றவாறு கொந்தளித்துவிட்டார் தாமரை.