1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (15:47 IST)

ஹீரோயின் ஆயிட்ட குஷியில் அனிகா… கண்ணைக் கவரும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்த்திரமாக ஐந்து சுந்தரிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பேபி அனிகா. அதன் பின்னர்  அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மீண்டும் விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்து கவனத்தை ஈர்த்தார். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். தற்போது கதாநாயகியாக ப்ரமோஷன் ஆகியுள்ள அனிகா நடித்துள்ள ஓ மை டார்லிங் என்ற திரைப்படம் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் அனிகா, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த படங்களை எல்லாம் சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். அவையும் வைரலாகப் பரவி சீக்கிரமே அனிகா கதாநாயகியாக மாறிவிடுவார் என அனைவரையும் சொல்ல வைத்துள்ளன.

அந்தவகையில் இப்போது கதாநாயகியாகி விட்ட அனிகா, குஷி மூடில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.