வியாழன், 14 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2018 (22:30 IST)

ரிலீசுக்கு முன்பே ரசிகர்களுக்கு படத்தை போட்டு காண்பிக்க விஷால் திட்டம்

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலகில்  ‘ப்ரீ ரிலீஸ் ஃபோகஸ் டிஸ்கஷன் என்ற நடைமுறை கடந்த சில வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது ரிலீசுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்கள், சில தேர்வு செய்யப்பட்ட விமர்சர்கள் மற்றும் ரசிகர்களுக்கு படத்தை போட்டு காண்பித்து அவர்களின் கருத்தை கேட்டு, தேவைப்பட்டால் ஒருசில காட்சிகளில் மாற்றம் செய்யப்படுவதுதான் இந்த  ‘ப்ரீ ரிலீஸ் ஃபோகஸ் டிஸ்கஷன்.

ஒரு படத்தை இயக்குபவர் என்னதான் நூறு முறைக்கு மேல் அந்த படத்தை பார்த்திருந்தாலும் அவர் செய்த தவறு அவருடைய கண்ணுக்கு தெரியாது. ஆனால் ஒரே ஒரு தடவை பார்க்கும் ரசிகன், அந்த தவறை கண்டுபிடித்துவிடுவார். அந்த தவறை ரிலீசுக்கு பின்னர் படக்குழுவினர் புரிந்து கொள்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே தான் இந்த  ‘ப்ரீ ரிலீஸ் ஃபோகஸ் டிஸ்கஷன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த நடைமுறையை தமிழ் திரையுலகிற்கு முதல்முறையாக விஷால் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார். விஷால் நடித்து முடித்துள்ள 'இரும்புத்திரை' படத்தின் ரிலீசுக்கு பத்து நாட்களுக்கு முன்னர்  ‘ப்ரீ ரிலீஸ் ஃபோகஸ் டிஸ்கஷன்' ஷோ ஒன்றை நடத்தி ரசிகர்களிடம் கருத்து கேட்டு, தேவைப்பட்டால் ஒருசில காட்சிகளை மாற்ற விஷால் உள்பட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த நடைமுறையை இனிவரும் இயக்குன்ர்கள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.