1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (17:03 IST)

''சேட்ட புடிச்ச ஆளு சார்''...வைரல் மீஸ்ம்ஸ் பற்றி பார்த்திபன் டுவீட்

parthiban
ரசிகரின் கோரிக்கையை ஏற்று பதிலளித்த பார்த்திபனின் டூவிட்டிற்கு மீம்ஸ் உருவாகி வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து பார்த்திபன் ஒரு தத்துவம் பதிவிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் என்ற நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

பொன்னியில் செல்வன் -1 திரைப்பட டிக்கெட் முன்பதிவு  விற்பனையில் சாதனை படைத்து வரும் நிலையில், இப்படத்தில் நடித்த படக்குழுவினரும் தொடர்ந்து புரமோஷன்  செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள  நடிகர் பார்த்திபன், சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் சரத்குமாருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.   3 ஐ கான் களும் ஒரே பிரேமில் என்று பதிவிட்டிருந்தார்,. சமீபத்தில் ஒரு ரசிகர், சார் சின்னதா ஒரு ஹாய்  சொல்லுங்க என கோரிக்கை விடுத்தார்.

அதன்பின் ஆங்கில எழுத்துகளில் ஹாய் எனப் பதிவிட்டார் பார்த்திபன். அதன்பின் எடிட்டர் ஹரீஸ்-ந்  சேட்டை புடிச்ச ஆளு சார் என்ற  தலைப்பிலான மீம் வைரலானது.

இதுகுறித்து, இன்று, ஒரு பதிவிட்டுள்ளார் பார்த்திபன். அதில், மீன்ல விரால் நல்லது,
மீம்ஸ்  viral  ஆவது நல்லது!

(எடிட்டர் ஹரீஷ் அனுப்பியதால் வந்த தத்துவமிது)

இங்கு
நல்ல
மீம்கள்
விற்கப்படும் எனப் பதிவிட்டுள்ளார்.