செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (16:22 IST)

பொன்னியின் செல்வன் பேய் ஓட்டம்… சுந்தர் சி படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு?

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்த வாரம் ரிலீஸாக இருந்த திரைப்படங்கள் ரிலீஸ் தள்ளிவைக்கப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

சுந்தர் சி யின் படங்களுக்கு என்றே ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உண்டு. வழக்கமாக காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை உருவாக்கும் சுந்தர் சி, கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்களாக எடுத்து ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றமளித்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ள அவர் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்கியுள்ளார்.

காஃபி வித் காதல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி தமிழகம் முழுவதும் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸை தற்போது நவம்பர் மாதத்துக்கு மாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.