வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: புதன், 25 அக்டோபர் 2017 (13:45 IST)

கணவருடன் ஆணுறை விளம்பரத்தில் நடிகை - பாலிவுட்டில் சர்ச்சை

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தனது கணவரும் நடிகருமான கரண் சிங்குடன் சேர்ந்து நடித்துள்ள காண்டம் விளம்பர வீடியோ பாலிவுட்டில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.


 

 
கடந்த வருடம் ஏப்ரல் மாதம், பிபாசு பாசுவும், கரண் சிங்குவும் காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்கள் இருவருக்கும் திரைப்படங்களில் சரியான வாய்ப்புகள் இல்லை. எனவே, கலை நிகழ்ச்சிகள், பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், அவர்கள் இருவருடன் இணைந்து நடித்த காண்டம் விளம்பரம் சமீபத்தில் வெளியானது. இதைக் கண்ட பாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சியடைந்தனர். இதில் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
ஆனால், செக்ஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். எனவேதான், ஆணுறை விளம்பரத்தில் தான் நடித்ததாக பிபாசு பாசு விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும், சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் பிபாசு பாசு இதுபோன்ற விளம்பரத்தில் நடித்துள்ளார். மற்றபடி விழிப்புணர்வு என்று கூறுவதெல்லாம் கப்சா என சிரிக்கிறார்களாம் பாலிவுட்காரர்கள்.
 
ஏற்கனவே கவர்ச்சி கன்னி சன்னி லியோன் நடிகர் ரன்வீர் சிங்குடன் ஆணுறை விளம்பரத்தில் நடித்து அது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.