திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 25 அக்டோபர் 2017 (13:50 IST)

சர்ச்சையை ஏற்படுத்திய மெர்சல்; தெலுங்கில் ரிலீஸ் தேதி வெளியீடு

தமிழில் தீபாவளி தினத்தன்று 'மெர்சல்' படம் வெளியானது. தீபாவளி அன்றே தெலுங்கிலும் வெளிவரும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தெலுங்கு சென்சார் வேலைகள் முடிவடையாததால் தீபாவளியன்று படம் தெலுங்கில்  வெளியாகவில்லை.

 
தெலுங்கில் மெர்சல் படம் 'அதிரிந்தி' என்ர பெயரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது 'அதிரிந்தி' படத்திற்கு 'யு/ஏ'  சான்றிதழ் கிடைத்துள்ளது. எனவே, நாளை மறுநாள் 27ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் படம் வெளியாக  உள்ளது.
 
தமிழகத்தில் பல சர்ச்சைகளுக்கிடையே, ரசிகர்களிடையே மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் தெலுங்கிலும் அதே எதிர்பார்ப்பு உள்ளது. தமிழில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய 'பணமதிப்பிழப்பு விவகாரம், ஜிஎஸ்டி வசனம்' ஆகியவை தெலுங்கில் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து இன்னும் தகவல் வரவில்லை. 
 
தமிழில் ஏற்பட்ட சர்ச்சையால், தெலுங்கில் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள்  தகவல் தெரிவிக்கின்றன.