பூட்டிய வீட்டிற்குள் கனகா ! நீடிக்கும் மர்மம்!

VM| Last Modified ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (12:07 IST)
கரகாட்டக்காரன்’ படத்தில்   நடித்த கனகாவின் நிலை, இப்போது மர்மமாக இருக்கிறது.

 
கனகா, பழைய கதாநாயகி தேவிகாவின் ஒரே மகள். ‘முத்துகுமார்’ என்ற என்ஜினீயரை அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், முத்துகுமார் யார் என்றே எனக்கு தெரியாது என்று கனகா கூறினார்.
 
தேவிகா  கதாநாயகியாக   நடித்து சம்பாதித்த சொத்துகளுக்கு எல்லாம் ஒரே வாரிசு, கனகாதான். தனது அம்மாவின்  பழைய பங்களாவில்தான் அவர் வசித்து வருகிறார். தன்னிடமுள்ள சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற பயம் அவரது மனதில் பயத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால்தான் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லையாம்.
 
அவர், கடந்த சில வருடங்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தனிமையில் வசித்து வருகிறாராம். பெரும்பாலும் அவர் வெளியே வருவதில்லை. சமீபத்தில் நடந்த ஒரு சினிமா சங்க தேர்தலில் அவர் கலந்து கொண்டு ஓட்டுப்போட்டதாக சொல்கிறார்கள்.
 
பூட்டிய வீட்டுக்குள் வருடக்கணக்கில் அவர் வசித்து வருவது, அவரை பற்றிய மர்மங்களை மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :