வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 மே 2018 (19:03 IST)

இலங்கை: பரவி வரும் காய்ச்சலால் 15 பேர் பலி

இலங்கையில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் 15 பேர் பலியாகியுள்ள நிலையில் 50க்கும் மேறபட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 
 
இலங்கையில் உள்ள தென் பிராந்தியத்தில் கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் 15 குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் 1 வயதில் இருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளை அதிகமாக இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதனால் நோய் பரவாமல் தடுக்க தென் பிராந்தியத்தின் மாத்தறை, முலடியான, அகுரெஸ்ஸ, தங்காலை, வலஸ்முல்ல, காலி ஆகிய கல்வி துறைகளுக்கு உட்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு 25ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த காய்ச்சல் பரவி வரும் பகுதிகளை சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.