செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (19:26 IST)

சர்வாதிகாரி ஹிட்லர் மரணம்: மர்மத்தை தீர்த்த ஆய்வு!

இரண்டாவது உலகப் போரில் நேச நாட்டுப் படைகளிடம் ஜெர்மனி தோல்வியடைந்தது. இதனால் காதலி இவா பிரானுடன் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார் என்கிறது சரித்திரம்.
 
அத்துடன் இருவரது உடல்களும் எதிரிகளுக்கு கிடைத்துவிட கூடாது என்பதற்காக அவை உடனடியாக தீயிட்டு எரிக்கப்பட்டன என்றும் வரலாற்று பக்கங்களில் கூறப்படுகிறது.
 
ஆனால், அவரது மரணம் குறித்து இரு விதமான செய்திகள் உலா வருகிறது. 1945 ஆம் ஆண்டு பெர்லின் பதுங்கு குழியில் தனது காதலி ஈவா பிரயுனுடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும். 
 
அவர் தற்கொலை செய்யவில்லை அங்கிருந்து தப்பித்து நீர்மூழ்கி கப்பல் மூலம் அர்ஜென்டினாவுக்கு சென்றார் எனவும், அண்டார்டிகா அல்லது வேறு பகுதிக்கு சென்று தலைமறைவாகிவிட்டார் என்ற செய்தியும் உள்ளது. 
 
இந்நிலையில், இந்த மர்மங்களை போக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு பலன் கிடைத்துள்ளது. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓட்டில் இருந்த பல் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. 
 
அந்த மண்டை ஓட்டில் இடது புறத்தில் துப்பாக்கி குண்டு துளைத்த அடையாளம் உள்ளது. எனவே, ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார், அவர் எங்கும் தப்பி செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது.