வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 12 ஜூன் 2021 (15:34 IST)

''வலிமை ''படத்திலிருந்து விலகிய நடிகர்கள் ! ரசிகர்கள் அதிர்ச்சி

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் போனிகபூர் தயாரித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தின் டைட்டில் ‘வலிமை’ என்பதை தவிர படக்குழுவினர் அதிகாரபூர்வமாக இன்னும் எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடிக்கும் நாயகி ஹூமோகுரேஷி, வில்லன் கார்த்திகேயன் உள்பட பல தகவல்கள் படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்தது தான் என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் யார் யார்? தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என இதுவரை படக்குழு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மே 1ஆம் தேதி வெளியாக இருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்நிலையில்,  வலிமை பட இயக்குநர் ஹெச். வினோத் கூறியுள்ளதாக வெளியாகும் தகவலின்படி இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட  சில நடிகர்க்ள் , நடிகைகள் விலகிவிட்டதாகத்தெரிகிறது.

வலிமை படத்திற்காகச் சில காட்சிகள் கடந்த ஆண்டு படமாக்கியபோது, ஷுட்டிங் சென்ற சீனியர் நடிகர்கள், தற்போது கொரொனா இரண்டாம் அலை காரணமாக அவர்கள் கோவிட் 19 மீதுள்ள பயத்தால் படப்பிடிப்புக்குச் செல்ல பயந்து வர மறுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

 எனவே ஏற்கனவே நடித்த நடிகர்களுக்குப் பதிலாக புதிய நடிகர்களை வலிமை படத்தில் நடிக்க வைக்க ஹெச். வினோத் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
எப்படியோ விரைவில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் அப்டேட்டும், படமும் விரைவில் வெளியாக வேண்டுமென அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.