திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (14:50 IST)

வைரமுத்துவுக்கு ஆதரவாக நடிகரின் பேச்சு

பாடகி சின்மையி வைரமுத்துக்கு எதிராக பாலியல் குற்றசாட்டு கூறியுள்ளதை அடுத்து தமிழ்நாட்டில் மீடூ விவகாரம் சூடுபிடித்துள்ளது.இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக உதவி இயக்குநரும் கவிஞருமான லீனா மணிமேகலை தன் டிவிட்டர் பக்கத்தில் பாலியல் புகார் பதிவு செய்திருந்தார். அதனையடுத்து பலரும் லீனாவுக்கு ஆதரவுக்குரல் கொடுத்தனர். லீனா சுசிகணேசன் மீது பாலியல் புகார் சொன்னது போல நடிகை அமலாபாலும் சுசிகணேசன் மீது புகார் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பல பிரபலங்களின் உண்மை முகங்கள் இவ்விவகாரத்தில் வெளியே தெரிந்துவருவதால் பாதிக்கப்பட்ட பெண்கள்  பலரும் தங்கள் மன வருத்தத்தை மீடூ மூலமாக கொட்டி ஆறுதல் தேடி வருகிற சூழ்நிலையில் தற்போது மீடியாக்களும் பெண்களுக்கு ஆதரவாக இருகின்றன என்று சொன்னால் அது மிகையல்ல.
 
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து வைரமுத்துவின் நண்பரும் நடிகருமான மாரிமுத்து கூறியதாவது:
 
’வைரமுத்துவிற்கு ஹார்மோன்கள் சுரக்கிறது. அதனால் பெண்களை அவர் அழைக்கிறார். பெண்களைத் தானே தனது அறைக்கு வருமாறு அழைக்கிறார். அவர் ஆண்களை அழைத்தால் தான் தவறு.’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
 
மாரிமுத்து இப்படி பேசியிருப்பது வைரமுத்துவிற்கு தெரியுமோ இல்லையோ ஆனால் மற்ற நடிகர்கள் எல்லாம் இவர் இப்படி பேசியதற்காக இவரை பாராட்டி வருவதாக தகவல் தகவல் பரவி வருகிறது.