செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (12:01 IST)

முதலவர் பழனிசாமிக்கு திருமண வரவேற்பு அழைப்பிதழ் கொடுத்த யோகி பாபு!

முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு திருமண வரவேற்பு அழைப்பிதழ் கொடுத்த யோகி பாபு.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு. இவர் பிரபல நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அவரது குலதெய்வ கோவிலில் வைத்து மஞ்சு பார்க்கவி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.


இந்நிலையில் இன்று நடிகர் யோகி பாபு முதலவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவரக்ளை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். இந்த வரவேற்பு நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 5-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.