வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (13:02 IST)

அரசியல் கட்சியில் நானா ? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விவேக் !

நகைச்சுவை நடிகர் விவேக் அரசியல் கட்சி ஒன்றில் இணைய இருப்பதாக வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் விவேக் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாது மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு விளம்பரப்படங்களில் மற்றும் பள்ளிக் கல்லூரிகளில் மாணவர்களிடையேக் கலந்துரையாடுதல் என பல சமூக நல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருக் கட்டமாக சமீபத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விளம்பரப்படம் ஒன்றில் நடித்தார்.

அதையடுத்து விவேக் அரசியலில் இறங்கப்போகிறார் என்றும் குறிப்பிட்ட ஒருக் கட்சியில் இணையப்போகிறார் என்றும் வதந்திகள் உலாவர ஆரம்பித்தன. அதனால் அதிர்ச்சியடைந்த விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘இதன் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பது. நான் எந்த கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயகக் கடமை. அதை செவ்வனே செய்வேன். அனைத்து கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள்.வதந்திகளை நம்ப வேண்டாம்’ எனத் தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.