1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (23:05 IST)

ரஜினி பட இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் விஷால்

நடிகர் விஷாலின் 34 வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் முத்தையாவின் அடுத்த படத்தில் விஷால் நடிக்கவுள்ளார். இப்படத்தை கர்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ளதாகவும், இது விஷாலின் 34 வது படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே முத்தையாவின் இயக்கத்தில் விஷால் ’மருது’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் மீண்டும் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் இது ஆக்சன் படமாக உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.