தனுஷ் நடிப்பு ’கர்ணன்’ - ரஜினி பட இயக்குநர் புகழாரம்

Sinoj| Last Modified செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (22:01 IST)

கர்ணன் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ள ரஜினி பட இயக்குநர்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘கர்ணன். இத்திரைப்படத்தை எஸ் .தாணு தயாரித்துள்ளார்.

இப்படம்நேற்று வெளியான நிலையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை பலரும் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில், தனுஷ் படங்களிலேயே முதல் நாள் வசூலில் கர்ணன் திரைப்படம் புதிய சாதனை படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ், கர்ணன் படத்தில் நடித்துள்ள தனுஷை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: கர்ணன் படத்தின் உண்மைத்தன்மை வலிமிகுந்திருந்தது. நடிப்பு கர்ணன் தனுஷ். அவர் தன்னுள் இன்னும் எத்தனை திறமைகள் சேர்த்து வைத்துள்ளாரோ?? கர்ணன் படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :