செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 31 டிசம்பர் 2018 (07:48 IST)

தொழிலதிபர் மகளை மணக்கின்றாரா விஷால்?

நடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவரும் விரைவில் அரசியல்வாதியாக மாறவிருப்பவருமான விஷால் 40 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். நடிகர் சங்கத்திற்கு என சொந்த கட்டிடம் கட்டி முடித்தவுடன் திருமணம் என்று கூறி வந்த விஷால், தற்போது நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் முடிவடையவுள்ள நிலையில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாராம்

ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை விஷால் திருமணம் செய்யவிருப்பதாகவும், இது பெற்றோர்கள் முடிவு செய்த பெண் என்றும், பெண்ணின் பெயர் அனிஷா என்றும் தகவ்ல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வரும் ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தமும் விரைவில் திருமணமும் நடைபெறும் என்றும் விஷால் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நடிகர் விஷால், நடிகை வரலட்சுமியை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தான் விஷாலை காதலிக்கவில்லை என்றும், விஷால் விரைவில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் பேட்டி ஒன்றில் வரலட்சுமி தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.