வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (20:45 IST)

கல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்

விமல் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் “கன்னி ராசி” திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன்பு வெளியானது.

சமீப காலமாக விமல் நடித்த எந்த படமும் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை. தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் “களவாணி 2” கூட முதல் பாகம் அளவுக்கு இல்லை என்று குறைப்பட்டு கொண்டார்கள் ரசிகர்கள். இந்நிலையில் “கன்னி ராசி” என்ற விமலின் அடுத்த படம் வெளியாகவிருக்கிறது.

விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி நடித்திருக்கிறார். பல நாட்களாக வில்லியாக நடித்து கொண்டிருந்தவர் நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

ட்ரெய்லரை பொறுத்த வரை காதலித்து ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளாமல் பெற்றோர் பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் விமல். ஆனால் எந்த வரனும் சரியாக அமையவில்லை. இந்த நேரத்தில் காதல் குறுக்கிடுகிறது. பிறகு வழக்கம்போல காமெடி, அடிதடி என ட்ரெய்லர் விருவிருப்பாக இருக்கிறது.

இதே விருவிருப்பு படத்திலும் இருந்தால் இந்த முறையாவது விமலுக்கு ஒரு வெற்றிபடம் அமையும்.