பிகில் படத்தில் நயன்தாராவின் கேரக்டர் இதுதான் - புகைப்படத்துடன் லீக்கான ரகசியம்..!

Last Updated: செவ்வாய், 16 ஜூலை 2019 (15:27 IST)
பிகில் படத்தில் நடிகை நயன்தாரா பிசியோதெரபி மாணவியாக நடித்துள்ளதாக சமீபத்திய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 
ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய்யின் தற்போது பிகில் படத்தில் நடித்துவருகிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகும்  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் , செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்து வெளிவந்து விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 


 
மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் பெண்ககள் கால்பந்தாட்ட வீரராக மகன் விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடிக்கும் பிகில்  படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா  பிசியோதெரபி மாணவியாக நடித்துள்ளாராம். இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டு நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 
 
தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :