1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 அக்டோபர் 2024 (18:18 IST)

மீண்டும் ஆரம்பித்த மாநாட்டு வேலை.. போலீசாரின் கேள்விகளுக்கும் பதிலளிக்க தவெக முடிவு..!

vijay-bussy anand
தமிழக முழுவதும் பெய்து வரும் கன மழை காரணமாக, தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை வெறித்ததால் மீண்டும் மாநாட்டு பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே நடைபெற இருக்கின்ற நிலையில், மாநாட்டுக்கு போலீசார் சில நிபந்தனைகள் விதித்ததாகவும், அந்த நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 
 
இந்த நிலையில், கடந்த நான்காம் தேதி மாநாட்டு பணிகள் பூஜையுடன் தொடங்கிய நிலையில் திடீரென ஏற்பட்ட கன மழை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மழை நின்று விட்டதால் மீண்டும் மாநாட்டு பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த நிலையில், போலீசார் கேட்ட ஐந்து கேள்விகளை தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அதற்கான பதில் அளிக்கப்பட இருப்பதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். மாநாட்டு பந்தலை சுற்றி அவசர சிகிச்சைக்காக மருத்துவ குழுவினர் மருத்துவ பணியில், 550 டாக்டர்கள், 150 நர்சுகள் பணிபுரிய இருப்பதாகவும், 15 ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட இருப்பதாகவும், மாநாட்டு பந்தலை பார்வையிட்ட பின்னர் அவர் கூறினார்."
 
 
Edited by Mahendran