வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (22:58 IST)

ஆந்திர மாநில அரசியலில் நடிகர் விஜய் ?….வைரலாகும் போஸ்டர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்யின் புகைப்படத்துன் ஆந்திர அமாநிலத்தில் ஒரு கட் அவுட் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது. இது வைரலகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்  விஜய். இவரது சமகால நடிகர்கள் அஜித், சூர்யா போன்றோர் மறைமுகமாக அரசியல் பேசாத நிலையில், விஜய் தன் படங்களில் அரசியல் கருத்துகள்,வசனங்கள் வைப்பது வாடிக்கைவாடிவிட்டது.

இதை அவரது ரசிகர்கள் ரசித்தாலும் அவ்வப்போது சிக்கல்களும் எழும். இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் படத்திற்குப் பிறகு இந்தி சினிமா, தெலுங்கு சினிமாவில் விஜய்க்கு மார்க்கெட் சூடுபிடித்துள்ளது.

எனவே ஆந்திர மாநிலத்தி ஒரு அரசியல் கட்சி சார்பில் சாலையில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் அம்பேத்கார் புகைப்படமும் அதற்கருகில் அம்மாநில அரசியல்வாதிகளின் புகைப்படமும் அதற்கு அருகில் விஜய் படம் இடம்பெற்றுள்ளது.