செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (16:46 IST)

தன் ரசிகனின் குழந்தைக்கு பெயர்சூட்டி மகிழ்ந்த விஜய் சேதுபதி!

ரசிகனின் மகனுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த நடிகர் விஜய் சேதுபதி!
 
தமிழ் சினிமாவில் இளம் நடிகரான விஜய் சேதுபதி வித்தியாசனான படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் தனது கேரியரை முடித்துக்கொள்ளாமல் எந்த ஹீரோவும் இதுவரை யோசித்துக்கூட பார்க்காத வில்லன் வேடத்தில் நடித்து அசதி வருகிறார்.
 
விக்ரம் , ரஜினி, விஜய்க்கு  வில்லனாக நடித்ததை தொடர்ந்து தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக  படத்தில் நடித்து வருகிறார். மேலும் விக்னேஷ் ஸ்வன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் விஜய்சேதுபதி தர்மபுரி மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் சிலம்புவின்  மகனுக்கு ‘துருவன்’ என பெயர் சூட்டியுள்ளார்.