செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (16:39 IST)

நடிகர் விஜய் கொரோனா விதிமுறைகளை மீறினாரா???

தமிழ் சினிமாவில் காமெடி நடிகரும் சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.  அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினர் என்பதும் அவரது இறுதிச் சடங்கில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்தனர் .

இந்த நிலையில் விவேக் உடன் யூத், பத்ரி, திருமலை உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்த விஜய், விவேக் மறைவிற்கு ஒரு டுவிட் கூட போடவில்லை என்று அவர் மீது விமர்சிக்கப்பட்டது.

எனவே, விஜய்65 படத்திற்கு படக்குழுவினருடம் ஜார்ஜியா சென்றிருந்த விஜய் நேற்று  சென்னை திரும்பிய நிலையில் இன்று காலை விவேக்கின் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் விவேக்கின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து விஜய் திரும்பியதும் கொரொனா தொற்றுக் காலத்தில் தன்னைத் தனிப்படுத்திக் கொண்டு, விவேக்கின் மறைவுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டு பின்னர் அவரது இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருக்கலாம் எனப் பலரும் கருத்துக் கூறி வருகின்றனர்.

இன்னும் சிலர் கொரொனா தொற்றுக் காலத்தில் விஜய் கொரோனா விதிமுறைகளை மீறியுள்ளார் எனக் குற்றம்சாட்டி வருகின்றனர்.