நடிகர் விஜய் ஓட்டிச் சென்ற ’’சைக்கிளின்’’ விலை இதுதான்....

வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் வந்த விஜய்
Sinoj| Last Modified செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (22:01 IST)

இன்று காலை விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னையில் உள்ள திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்கு சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்தனர்.

விஜய் நீலாங்கரையில்உள்ள வாக்குச்சாவடிக்கு வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு வந்து ஓட்டளித்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். விஜய் சைக்கிளில் வந்ததற்கும் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது என பேசப்படும் இநேரத்தில் அதற்கான காரணம் என்னெவனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிரொலிக்கும் விதமாக நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக அவரது ரசிகர்கள் இணையத்தில் கருத்து பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் இன்று காலையில் ஓட்டுப்போடும்போது, ஓட்டிச் சென்ற சைக்கிள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

சைக்கிளின் எடை _ 16 கிலோ, இதன் விலை ரூ.22.500, பிரேக் – மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும்
24 ஸ்பீடு கியர், இதன் நிறம் கார்பன் கறுப்பு மற்றும் நியான் ரெட் ஆகிய இரு நிறங்கள், இந்த சைக்கில் 2019 மாடல் ஆகும்….இதன் டயர்கள் 29 * 2.1 என்ற தகவல்கள் இணையதளத்தில் பரவிவருகிறது.இதில் மேலும் படிக்கவும் :