திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 10 ஆகஸ்ட் 2022 (18:32 IST)

பாஜகவில் இணையவுள்ள ரஜினி பட நடிகை

jeyasudha
தெலுங்கு சினிமாவில் 70 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. அப்போதைய சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்ற அவர், தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவில் பிரபல நடிகையாகவும் வலம் வந்தார்.

இந்த நிலையில், தமிழில் பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல்  நடிப்பில் வெளியான நினைத்தாலே இனிக்கும் என்ற படத்திலும், அபூர்வ ராகங்கள் என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

சினிமாவில் இருந்தபோதிலும் அரசியலில் ஆர்வம் காட்டிய ஜெயசுதா காங்கிரஸ் கட்சிய்ஹில் இணைந்து, கடந்த 2009 ஆம் ஆண்டில் செகந்திராபாதி  எம்.எல்.ஏ ஆனார்.  அடுத்த தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்ததால்.  அரசியலில் இருந்து விலகினார்.

இந்த  நிலையில், சமீபத்தில் தெலுங்கானா பாஜக தலைவர்களில் ஒருவரான ஏரெலா ராஜசேகரை, ஜெயசுதா சந்தித்துப் பேசியதாக வெளியான அடிப்படையில் அவர் விரைவில் பாஜகவில் இணையவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.