1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 18 ஜூன் 2022 (19:47 IST)

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு Common DP ரிலீஸ்...

vijay66
தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர் விஜய்.இவரது 48 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், தெலுங்கு இயகுனர் வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் படம் விஜய்66. இப்படத்தில் விஜய்யக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா  நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து, பிரகாஷ்ராஜ், ஷ்யாம், உள்ளிட்ட  நடிகர்கள் நடிக்கவுள்ளார்.

வேகமாக நடந்து வரும் விஜய்66 படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸாகவுள்ளது.

நேரடி தெலுங்கு தமிழில் உருவாகிவரும் இப்படத்திற்கு Vaarasudu –வாரசுடு என்று பெயரிட்டுள்ளதாகவும், இதற்குப் பொருள் வெற்றி  எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,விஜய் பிறந்த நாளை முன்னிட்டு  இன்று ரசிகர்கள் இணையதளத்தில் காமன் டிபியை வெளியிட்டுள்ளனர். அதில், நடிகர் விஜய்யின் 66 படத்தை கருத்தில் கொண்டு சில புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இது Thalapathy66  என்ற ஹேஸ்டேக்கில் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.