அந்த நடிகையுடன் தொடர்ந்து நடிப்பேன்- நடிகர் விஜய்சேதுபதி
அந்த நடிகையுடன் தொடர்ந்து நடிப்பேன் என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில், தென்மேற்குப்பருவக்காற்று என்ற படத்தில் சீனுராமசாமி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஜய்சேதுபதி.
இப்படத்தை அடுத்து, அவர் நடித்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் காயத்ரி. இப்படத்தை அடுத்து, அவருடன் தொடர்ச்சியாக சூப்பர் டீலக்ஸ், புரியாதபுதிர், ரம்பி, துக்ளக் தர்பார், விக்ரம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், விஜய்சேதுபதி- காயத்ரி இணைந்து நடித்த மாமனிதன் படம் வரும் 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜய்சேதுபதி கூறியதாவது: காயத்ரி நல்ல நடிகை, அவருடன் நான் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். இன்னும் நிறைய படங்களில் வேண்டுமானாலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும், இப்படத்தில் அவர் எனக்கு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் எனது மனைவியாக நடித்துள்ளார். அவரது திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.