புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (15:05 IST)

நடிகர் விஜய் ஒரு ஒயின் பாட்டில் போல…. வனிதா டுவீட் ! ரசிகர்கள் விமர்சனம்

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகள் வெடித்தது. அது வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தைக் குறித்து பல பிரபலங்கள் கூறிய விமர்சனங்கள் காரணமாக அமைந்தது என்றாலும் இன்னும் ஓயவில்லை.

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில், ’’எனக்கு எப்போதும் நீங்களே முதல் ஹீரோ. நான் உங்களது முதல் ரசிகையாக உள்ளேன். உங்களது படம் திரையில் வரும்போது உங்கள் மீதான அபிமானமும் அன்பும் அதிகரித்துக் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு ஒயின் பாட்டில் போல.  வயது அதிகரிக்க உங்கள் மீதான அன்பை மேலும்ம் அதிகரிக்கச் செய்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  நடிகர் விஜய்யை ஒயின் பாட்டில் போல நீங்கள்’’ என்று கூறியதற்கு வனிதாவுக்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். தன் மீதான இமேஜை அதிகரிக்கவே விஜய் குறித்து டுவீட் போட்டுள்ளார் என பலரும்  தெரிவித்துள்ளனர்.