திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (17:26 IST)

ஹலோ நண்பா..! இன்ஸ்டாகிராமில் நுழைந்த விஜய்! – சில நிமிடங்களில் லட்சக்கணக்கான ஃபாலோவர்கள்!

Vijay
பிரபல நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கியுள்ள நிலையில் அவரது புகைப்படம் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட பெரும் நடிகராக இருப்பவர் விஜய். நடிகர் விஜய் பெயரில் விஜய் நற்பணி மன்றங்கள் பல இடங்களில் செயல்பட்டு வருகின்றன. சோசியல் மீடியாக்களில் அதிகமாக இல்லாத விஜய் ட்விட்டரில் மட்டும் இருந்து வருகிறார். அதிலும் படத் தொடர்பான அப்டேட்டுகள் வந்தாலும் ட்விட்டரில் இன்றைய இளைஞர்கள் அதிகம் இல்லை என்பதும் விஜய்யை பின் தொடர ஒரு குறையாக இருந்தது.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார் நடிகர் விஜய். இளைஞர்களின் புகலிடமான இன்ஸ்டாவில் விஜய் கணக்கு தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் 8 லட்சம் பேர் அவரை பின் தொடரத் தொடங்கியுள்ளனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay (@actorvijay)