நாளை முதல் மீண்டும் சென்னையில் தொடங்கும் லியோ ஷூட்டிங்!
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் கௌதம் மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில் காஷ்மீரில் இருந்து சமீபத்தில் சென்னை திரும்பியது படக்குழு. இதையடுத்து சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு நாளை முதல் லியோ ஷூட்டிங் மீண்டும் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.