இவர் ஒரு மரண வியாபாரி: ’ஜவான்’ படத்தின் விஜய் சேதுபதி போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்..!
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது
தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் ஏற்கனவே ஷாருக்கான் மற்றும் நயன்தாரா லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் லுக் போஸ்டரை ஷாருக்கான் வெளியிட்டுள்ளார்.
இந்த போஸ்டரில் இவர் ஒரு மரண வியாபாரி என்று குறிப்பிட்ட நிலையில் விஜய் சேதுபதியின் கேரக்டர் மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran