திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (14:53 IST)

நடிகர் எஸ்.வி சேகர். மருத்துவமனையில் அனுமதி !

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் நாடக கலைஞருமான எஸ்.வி.சேகர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 80 களின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் எஸ்.வி.சேகர். இவர், காங்கிரஸில் இருந்து விலகி பின்பு பாஜகவில் இணைந்தார்.

தற்போது, பாஜகவில் நிர்வாகி இருந்து செயல்படும் எஸ்.வி.சேகர் அவ்வப்போது அரசியல் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை அவர் சென்னை மெட்ராஸ் இஎம்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் பதிவிட்டுள்ளதாவது:  இன்று காலையில், வெர்டிகோவுடன் அடிக்கடி வாந்தியும் ஏற்பட்டதால், உடனடியாக மெட்ராஸ் இஎன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். கடவுள் கருணையினாலும், மருத்துவர் காமேஷ்ரனாலும் குணமடைந்து வீடு திரும்பினேன்.  இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் பாடம் கற்கிறோம். இந்த முறை ஆயில் மசாஜிற்கு கட்டணமில்லை எனவும் உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj