திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 ஜூன் 2021 (18:24 IST)

விஜய்யுடன் டான்ஸ் ஆடும் சோனு சூட்…வைரலாகும் புகைப்படம்

விஜயுடன் நடிகர் சோனு சூட் இணைந்து ஒரு படத்தின் நடனம் ஆடியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவருடன் இணைந்து நடிகர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சோனு சூட் ஒரு படத்தின் நடனம் ஆடியுள்ளார்.

கள்ளழகர் படத்தில் விஜயகாந்திற்கு வில்லனாக நடித்தவர் சோனு சூட். அதன்பிறகு அருந்ததி படத்தில் வில்லனாக மிரட்டினார். ஆனால் விஜய் படத்தில் ஒரு பாட்டிற்கு நாடன கலைஞராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.  இதுகுறித்த புகைப்படம் இன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு கொரொனா கால ஊரடங்கின்போது, வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வர விமான உதவி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் பேருந்து வசதி, தொழிலாளர்களுக்கு உதவி, விவசாயிகளுக்கு டிராகடர், மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எனத் தொடர்ந்து உதவி செய்யும் நடிகர்  சோனு சூட்டை கடவுள் என்று அவரது ரசிகர்களும் மக்களும் வணங்கி வருகின்றனர்.

அவரது சமூக சேவைக்கு ஐநா விருது வழங்கிக் கவுரவித்துள்ளது,. அத்துடன் இந்தியாவில் புகழ்பெற்ற நடிகர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.