திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (15:55 IST)

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி & கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி!

விஜய் சேதுபதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

நடிகர் விஜய் சேதுபதியும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜும் குறும்படக் காலங்களில் இருந்தே நண்பர்கள். அந்த நட்பு அவர்கள் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்த போதும் தொடர்ந்தது. கார்த்திக் சுப்பராஜின்  பீட்சா, ஜிகர்தாண்டா, இறைவி மற்றும் பேட்ட ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர்கள் கூட்டணி இணைந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போது மீண்டும் இவர்கள் இணைந்து ஒரு படத்தில் இணைய உள்ளனர். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜே தயாரித்து இயக்க உள்ளாராம்.