வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 மே 2020 (16:28 IST)

கடைசி புலம்பெயர் தொழிலாளி வரைக்கும் அதை செய்வேன் – பிரபல நடிகர் நம்பிக்கை!

பாலிவுட் நடிகர் சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்காக பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்துகொடுத்து வருகிறார்.

இந்தியா கொரோனா ஏற்படுத்திய மிகப்பெரிய அசம்பாவிதங்களில் ஒன்று புலம்பெயர் தொழிலாளர்களை வெறும் காலோடு தங்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்ல வைத்ததுதான். இவர்களுக்காக மத்திய மற்றும் சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் போதுமான எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் பிரபல நடிகர் சோனு சூட் பேருந்துகளை ஏற்பாடு செய்து தந்து உதவி வருகிறார்.

மும்பையிலிருந்து கர்நாடகா செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பேருந்து ஏற்பாடு செய்த அவர் உத்தர பிரதேச மாநில அரசிடம் பேசி பேருந்துகளை வரவழைத்தார். முன்னதாக இவர் தனது நட்சத்திர ஹோட்டலை கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்காக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சோனு சூட் சமூகவலைதளத்தில் ‘தொழிலாளர்கள் தங்கள் வீட்டை விட்டு இப்படி தெருக்களில் அலைந்து திரிவதை பார்க்கையில் மனம் வலிக்கிறது. கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் குடும்பத்தோடு சேரும்வரை அவர்களை நான் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருப்பேன். ‘ எனத் தெரிவித்துள்ளார்.