செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 அக்டோபர் 2021 (15:22 IST)

சர்ச்சை டிவீட்டுக்கு சர்ச்சையாக விளக்கம் கொடுத்த சித்தார்த்!

நடிகை சமந்தா விவாகரத்து சர்ச்சையின் போது சித்தார்த் பகிர்ந்த டிவிட் சர்ச்சையைக் கிளப்பியது.

நடிகை சமந்தா சில தினங்களுக்கு முன்னர் கணவர் நாக சைதன்யாவைப் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக தனது விவாகரத்து முடிவை அறிவித்தார். அப்போது நடிகர் சித்தார்த் பதிவு செய்த டுவிட் ஒன்று சமந்தாவின் விவாகரத்து விவகாரத்தை கிண்டல் செய்திருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த டிவீட்டில் எனது ஆசிரியர் எனக்கு சொல்லிக்கொடுத்த முதல் பாடம் என்னவெனில் ’ஏமாற்றுவார்கள் எப்போதும் வெற்றி பெற மாட்டார்கள்’ என்று தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி ’நாகூர் பிரியாணி உளுந்துர் பேட்டை நாய்க்கு கிடைக்கும் என்று எழுதி இருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது’ என்றும் பதிவு செய்திருந்தார். ஏற்கனவே சமந்தா சித்தார்த் காதல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சித்தார்த்தின் டிவீட் அவரின் வக்கிரப்புத்தியையே காட்டுகிறது எனப் பலரும் விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் அந்த டிவிட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார் சித்தார்த். அதில் ‘யாரையும்  மனதில்  வைத்து  அந்த ட்வீட்டை போடவில்லை. பல வருடங்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவர் சொல்லித் தந்ததை நினைத்து அதனைப் பதிவிட்டேன். என்னுடைய அடுத்த படமும் அப்படி ஒரு விஷயத்தைத்தான் சொல்கிறது. அதனால் யாரையும் அதில் இழுக்காதீர்கள். யூகங்களுக்கு நான் பொறுப்பல்ல.  என்னுடைய வீட்டுக்கு வெளியே நாய்கள் இருக்கின்றன என்று சொன்னால் என்னைதான் அப்படி சொல்கிறார் என்று புகார் சொல்லக் கூடாது’ எனக் கூறியுள்ளார்.