புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (16:47 IST)

கருக்கலைப்பு வதந்திக்கு சமந்தாவின் விளக்கம்!

கருக்கலைப்பு வதந்திக்கு சமந்தாவின் விளக்கம்!
நடிகை சமந்தா கருக்கலைப்பு செய்ததாகவும் ஆண் நண்பர்களின் தொடர்பில் இருந்ததாகவும் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் என்றும் கூறப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்
 
சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யா விவாகரத்து செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை அடுத்து சமந்தா குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பி வந்ததை அடுத்து அதற்கு சமந்தா விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
 என் மீது அக்கறை காட்டுபவர்களுக்கும் என்னை பற்றி வரும் வதந்திகளை எதிர்த்து நிற்பவர்களுக்கும் நன்றி. நான் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், எனக்கு குழந்தை வேண்டாம் என்றும், நான் கருகலைத்துள்ளேன் போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். விவாகரத்து என்பதே ஒரு வேதனையான செயல். நான் இதிலிருந்து மீண்டு வர நேரம் தேவைப்படுகிறது. என்னை பற்றி இப்படி வதந்திகளை பரப்புவது இரக்கமற்றதாகும். ஆனால் இதற்கு பின்பும் என்னை பற்றி எதுவும் பேச நான் அனுமதிமாட்டேன் ‘ என்று கூறியுள்ளார்.