1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (13:16 IST)

டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: இரண்டே நாட்களில் 30,000 பேர் இணைப்பு!

blue sky
டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: இரண்டே நாட்களில் 30,000 பேர் இணைப்பு!
உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்
 
இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ ஜாக் டோர்சி என்பவர் புதிய செயலி ஒன்றை ஆரம்பித்துள்ளார்
 
ட்விட்டருக்கு போட்டியாக களம் இருக்கும் இந்த செயலிக்கு அவர் புளூ ஸ்கை என பெயர்  வைத்துள்ளார் என்பதும் இந்த செயலி சோதனை முயற்சியாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சோதனை முயற்சியிலேயே இரண்டே நாட்களில் 30 ஆயிரம் பேர் இந்த புதிய சமூக வலைதளங்களில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய சமூக வலைதளத்தை உருவாக்கி அதன் மூலம் எலான் மஸ்க்  உடன் நேருக்கு நேர் மோத ஜாக் டோர்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran