தோனியின் அறையில் மனைவியுடன் சாந்தணு… சிஎஸ்கே அணிக்காக நூதன சப்போர்ட்!

Last Modified திங்கள், 21 செப்டம்பர் 2020 (17:11 IST)

சென்னையில் சி எஸ் கே அணியினர் தங்கும் நட்சத்திர ஹோட்டல் அறையில் தங்கி மனைவிக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் நடிகர் சாந்தனு.

வழக்கமாக சிஎஸ்கே போட்டிகள் சென்னையில் நடந்தால் சினிமா நட்சத்திரங்களை அதிகமாக மைதானத்தில் பார்க்கலாம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக போட்டிகள் துபாயில் நடப்பதால், ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் சி எஸ் கே வின் தீவிர ரசிகரான நடிகர் சாந்தனு பாக்யராஜ் தன் மனைவியுடன் சென்னை அணியினர் வழக்கமாக தங்கும் நட்சத்திர ஹோட்டல் அறையில் தங்கி சென்னை போட்டியை பார்த்துள்ளனர். அறையெங்கும் இருக்கும் தோனியின் புகைப்படம் மற்றும் கையெழுத்துகளுடன் மனைவியுடன் செல்பி எடுத்து அதை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :