செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 செப்டம்பர் 2020 (17:12 IST)

437 நாட்களுக்குப் பிறகு களத்தில் தோனி… ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை சச்சினுக்கு நிகரான ரசிகர்களைக் கொண்டவர் மகேந்திர சிங் தோனி.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடைசியாக நியுசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தோனி கிரிக்கெட் களத்தில் விளையாடினார். அதன் பிறகு 437 நாட்களாக அவர் எந்தவொரு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடவில்லை.

இந்நிலையில்  5 மாத தாமதத்துக்குப் பின் நடக்க இருக்கும் ஐபிஎல் 13 ஆவது சீசனின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் தங்களை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக் விளையாட உள்ளது தோனி படை. இதனால் தோனி ரசிகர்கள் ஏக குஷியாக போட்டிக்குக் காத்திருக்கின்றனர்.