1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 16 டிசம்பர் 2017 (11:19 IST)

முதன்முதலாக மூன்று ஆண்களுடன் ஆர்யா: கலாய்த்த சதீஷ்

தமிழ் திரையுலகின் இன்றைய காதல் மன்னன் என்றால் அது ஆர்யா என்று தான் அனைவரும் கூறுவர். கிட்டத்தட்ட கோலிவுட் நடிகைகள் அனைவருமே ஆர்யாவின் நட்பு வட்டாரத்தில் உள்ளனர். தனது படங்களின் புரமோஷனுக்கு கூட போகாத நயன்தாரா, ஆர்யா தயாரித்த படம் ஒன்றின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டதில் இருந்தே நடிகைகள் மத்தியில் ஆர்யாவுக்கு இருக்கும் செல்வாக்கை புரிந்து கொள்ளலாம்
 
இந்த நிலையில் ஆர்யா நடித்து வரும் 'கஜினிகாந்த்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஸ்டில் ஒன்று சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. இந்த ஸ்டில்லில் ஆர்யாவுடன் சதீஷ், கருணாகரன் உள்பட மூன்று ஆண்கள் உள்ளனர்.
 
இந்த புகைப்படம் குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் சதீஷ், 'முதல்முறையாக ஆர்யா மூன்று ஆண்களுடன் ஆர்யா உள்ளார். அதாவது மூன்று ஆண்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்று கூற வந்தேன்' என்று கலாய்த்து டுவீட் செய்துள்ளார். இதற்கு பதிலளித்த ஆர்யா, 'இதுதான் ஆண்களுடன் நான் எடுக்கும் முதலும் கடைசியுமான புகைப்படம்' என்று கூறியுள்ளார்.