கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு !
தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் பகுதியில் கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் நாட்டாண்மை என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவன்மாரி. இவர் ராணுவ வீரர் ஆவார்.
இவரது மனைவி ககலா. இத்தம்பதிக்கு முகேஷ் (8 வயது) இஷாந்த்(5வயது) என இரு மகன்கள். சிவன்மாரி அப்பகுதியில், மாணவர்களுக்காக ராணுவப் பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
கடந்த 3 ஆம் தேதி சிவன்மாரி தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ராணுவப் பயிற்சி மையத்திற்குச் சென்றிருந்தார். அப்போது, இஷாந்த், மாணவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பார் இருந்த பாத்திரத்திற்குள் தவறி விழுந்தார்.
படுகாயமடைந்த இஷாந்தை மீட்டு, மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இஷாந்த் உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
a