வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (18:47 IST)

கமல், ரஜினியுடன் நடித்த சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி: கவலையில் ரசிகர்கள்..!

கமலஹாசன், ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்களில் அவர்களுக்கு நண்பனாக நடித்த சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி காரணமாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் ஹீரோ, குணச்சித்திர கேரக்டர் உள்பட பல கேரக்டர்களில் சரத் பாபு நடித்துள்ளார். குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து ஆகிய படத்தில் அவர் சிறப்பாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் வாழ்ந்து வரும் சரத்பாபு திடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva