திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 24 மார்ச் 2021 (19:00 IST)

’’நடிகர் ராதாரவி அதற்காகத்தான் பேசுகிறார்.’.. கமல்ஹாசன் விமர்சனம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் ராதாரவி நடிகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தார். அதில், நடிகர் கமல்ஹாசன் தன்னை நம்பி வந்த பெண்களையே காப்பாற்றத் தெரியாதவர் எனக் கூறினார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நடிகர்  கமல்ஹாசன் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : நடிகர் ராதாரவி தான் வாங்கும் சம்பளத்திற்கு என்னை விமர்சிக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீது மய்யம் சார்பில் கமல் 25 அம்சமுள்ள தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.