செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:37 IST)

தங்கைக் காதலுக்கு குறுக்கே நின்ற ராதாரவி மற்றும் ராதிகா!

நடிகை நிரோஷாவும் ராம்கியும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் முக்கியமானவர்கள்.

நடிகர் ராம்கி 80 களின் பின்பகுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். அதன் பின்னர் தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை நிரோஷாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த காதலுக்கு நிரோஷாவின் சகோதரியான ராதிகாவும், அண்ணன் ராதாரவியும் முதலில் சம்மதிக்கவில்லையாம்.

இதனால் இருவரும் பல இடையூறுகளை எதிர்கொண்டனராம். ஆனாலும் தங்கள் காதலில் இருவரும் உறுதியாக இருந்த நிலையில் பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு இன்று வரை இல்லற வாழ்வை இனிமையாக நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.