செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (17:21 IST)

பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி: ரஜினிக்கு வந்த அதே பிரச்சனை!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
லத்திகா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பவர் ஸ்டார் சீனிவாசன் அதன்பின்னர் ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ’ஒன்பதுல குரு’ ’ஆர்யா சூர்யா’ ’தலைவன்’ ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ உள்பட பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து இருந்தார் 
 
தற்போது அவர் ’நாங்க ரொம்ப பிஸி’ என்ற தொலைக்காட்சி திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென இன்று பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினிக்கும் இதே மாதிரி ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது