1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (08:09 IST)

இன்னும் பொன்னியின் செல்வன் முதல் பாகமே பாக்கல… படத்தில் நடித்த பார்த்திபன் சொன்ன தகவல்!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்த்திபன் மேடையில் பேசும் போது “நான் இன்னும் முதல் பாகமே பார்க்கவில்லை. முதல் பாகத்தைப் பார்க்க தஞ்சாவூருக்கு சென்ற போது ரசிகர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டேன். அதனால் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்று நான் சொல்ல முடியாது. முதல் பாகத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.